இ.பாஸ் மறுப்பு: வாழ்வதாரம் பாதிப்பு – கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் கோரிக்கை..!

Scroll Down To Discover

தமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இ. பாஸ் வழங்க கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறிப்பிட்டுள்ளாதாவது: ஊரடங்கு விதி முறைகளை மத்திய அரசு தளர்த்தி மாவட்டம் விட்டு , மாவட்டம் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ – பாஸ் தேவையில்லை என்று அறிவித்து உள்ளது . ஆனால் திருமணம் , மருத்துவம் , நெருங்கிய உறவினரின் மரணம் மற்றும் வேறு இடங்களில் சிக்கி தவிப்பவர்கள் இ – பாஸ்சுக்கு விண்ணப்பித்தால் அதை பரிசீலித்து மாவட்டம் விட்டு , மாவட்டம் சென்றுவர தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.

இ-பாஸ் அனுமதி கோரி முறையாக ஆவணங்கள் சமர்பித்தாலும் , எவ்வித காரணமின்றி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது . இதன் காரணமாக இறப்பு , திருமணம் , மருத்துவம் போன்ற காரணங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் . இதற்கிடையில் மளிகை கடைகளிலும் , தனிப்பட்ட புரோக்கர்கள் மூலம் லஞ்சமாக ரூ .4000 / – வரை கொடுக்கும்பட்சத்தில் இ – பாஸ் வழங்கப்படுவதாக பத்திரிக்கைகளிலும் , ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன.

எனவே, இவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் . இ – பாஸ் மறுக்கப்படுவதால் , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது . கொரோனா காலத்தில் நிவாரண உதவிகூட வழங்கப்படுவதில்லை . எனவே , முறையாக எல்லா ஆவணங்களும் கொடுக்கின்றவர்களுக்கு தாமதமின்றி. இ பாஸ் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்