இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டம் : நீலகிரியில் 5 பழங்குடியின மாணவர்கள் தேர்வு

Scroll Down To Discover

இஸ்ரோ விண்வெளி கல்வி திட்டத்தில் நீலகிரி பழங்குடியின மாணவர்கள் 5 பேர் தேர்வாகி உள்ளனர். இதன் மூலம் செயற்கை கோள் தயாரிப்பதை நேரில் பார்வையிட வாய்ப்பு கிடைத்து உள்ளது.

நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி அருகே கரிக்கையூரில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில், 131 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர்.

நாட்டின், 75-வது சுதந்திர தினத்தில், 75 செயற்கை கோள்களை ஏவும் இஸ்ரோவின் மெகா திட்டத்தில், தமிழகம் சார்பாக ஒரு ஏவுகணை தயாரித்து ஏவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், பங்குபெற தமிழகத்தில், 75 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், கரிக்கையூர் பழங்குடியினர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ராஜன், மாணவி ரேவதி இடம்பெற்றுள்ளனர்