இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!

Scroll Down To Discover

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 18ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் ,புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செயப்படுவதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது