இலங்கையைச் சேர்ந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் : பாஸ்போர்ட் அதிகாரி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்கு.!

Scroll Down To Discover

இலங்கையைச் சேர்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வழங்கியதாக பாஸ்போர்ட் அலுவலக கண்காணிப்பாளர் உள்பட மூவர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி வந்தனர் . இதில் ,வீரபுத்திரன் , டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரமேஷ் என்பவரின் துணையுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியர் சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியதும் , அதற்காக 45 ஆயிரம் பெற்றுக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, கண்காணிப்பாளர் வீரபுத்திரன் மற்றும் முகவர் ரமேஷ் மற்றும் பாஸ்போர்ட் வாங்கியவர் மூவர் மீதும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .