இராஜபாளையம் : ஊரடங்கு அறிவித்து நிலையிலும் இயல்பான நிலை போல் வாகனங்கள் அதிகமாக சென்றதால் ஊரடங்கு அமலில் உள்ளதா என்ற கேள்வி ?எழுப்பும் விதமாக காட்சிகள்..!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா தென்காசி சாலையில் ஊரடங்கு அறிவித்து நிலையிலும் வாகனங்கள் எப்போதும் போல் இயல்பாக இருப்பது போல் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

இதைபோல் இராஜபாளையம் காய்கறி மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்குவதற்கும் அதிகளவில் மக்கள் வந்து சென்றனர் . கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் காலத்தில் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதா இல்லையா என்ற விதத்தில் மக்கள் நகர் பகுதியில் சுற்றித் இருப்பதை காணமுடிந்தது. தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது தேவையில்லாமல் வருபவர்களை காவல்துறை எச்சரிக்கை அனுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் அலட்சியத்துடன் பலரும் சுற்றித் திரிகின்றனர்.