இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்.!

Scroll Down To Discover

எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுவதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக, இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை மிக்க செயல்முறையின் மூலம், எரிவாயு உற்பத்தியாளர்கள் சந்தையில் அதை விற்பதற்கான விலையை கண்டறிவதற்கான நிலையான அமைப்பை பரிந்துரைப்பது இந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.

இதன்மூலம் சந்தை சுதந்திரமும், ஏல முறையில் ஒரே மாதிரியான தன்மையும் உருவாகி வர்த்தகம் செய்வது எளிதாகும். எரிவாயு சந்தைப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மையையும், போட்டித் தன்மையையும் இது ஊக்குவிக்கும்.எரிவாயுவை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்களில் வேலை வாய்ப்புகளை இந்த சீர்திருத்தங்கள் உருவாக்கும்.