இயற்கையான முறையில் பாஸ்மதி அரிசியின் விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிற்சியை வழங்க பாஸ்மதி ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு முடிவு

Scroll Down To Discover

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நிறுவிய பதிவுபெற்ற சங்கமான பாஸ்மதி ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு, இயற்கையான முறையில் பாஸ்மதி அரிசியின் விளைச்சலை அதிகரிப்பதற்கான பயிற்சியை வழங்க முடிவெடுத்துள்ளது.

பாஸ்மதி அரிசி சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படும். பாஸ்மதி அரிசியின் வகைகளை கண்டறிவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகமொன்றை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் நிறுவியுள்ளது.

பாஸ்மதி அரிசியின் வகைகளை கண்டறிவதோடு, பூச்சிக்கொல்லி மிச்சங்கள், நச்சுப் பொருட்கள் மற்றும் கடும் உலோகங்கள் குறித்தும் இந்த ஆய்வகம் பரிசோதனை நடத்தும்.இந்த ஆய்வகம், செய்முறை விளக்க மற்றும் பயிற்சி பண்ணை மோடிபுரத்தில் உள்ள எஸ் வி பி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐ எஸ் ஓ தரச்சான்றை பெறவும் இந்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது.