இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!

Scroll Down To Discover

முசோரியிலும் உத்தரகண்ட் இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான வாடியா இன்ஸ்டிட்யூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி (Wadia Institute of Himalayan Geology – WIHG) அமைப்பின் விஞ்ஞானிகள் முசோரி நகர்ப்புறத்திலும் அதை ஒட்டியுள்ள இமயமலை அடிவாரத்தில் உள்ள 84 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினார்கள்.

இந்தப் பகுதிகளில் அதிக அளவில், மிக அதிக அளவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ள பகுதிகளாக படாகட், ஜார்ஜ் எவரெஸ்ட், கெம்ப்ட்ய் ஃபால், கட்டா பானி, லைப்ரரி சாலை, கலோகிதர் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மிகவும் சிதறுண்ட கிரால் சுண்ணாம்புக் கற்கள் சூழப்பட்ட 60 டிகிரிக்கும் அதிகமான சரிவு இங்கு காணப்பட்டது.

புவி அமைப்பு அறிவியல் சிஸ்டம் சைன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களைக் கண்டறியும் நிலச்சரிவு எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் விவரணையாக்கம் (The Landslide Susceptibility Mapping – LSM) இந்தப் பகுதியில் 29 சதவிகிதம் மிதமான நிலச்சரிவு ஏற்படக்கூடிய மண்டலம் என்றும், 56 சதவிகிதம் வெகு குறைவான அல்லது குறைவான அளவு நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதி என்றும் தெரிவிக்கிறது.