இந்து முன்னணி சார்பில் 30வது வருட விநாயகர் விசர்ஜன விழா..!

Scroll Down To Discover

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் நேற்று மணவாளக்குறிச்சி கடற்கரையில் 30வது வருட விநாயகர் விசர்ஜன விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர்கள் மணவாளக்குறிச்சி கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி அவர்கள் தலைமை ஏற்றார், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சோமன், குமரி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் சிவக்குமார், குமரி மாவட்ட பாஜக துணைத் தலைவர் ப.ரமேஷ், இரணியல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபகுமார், மற்றும் இந்து முன்னணி,பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.