இந்து கோவில்களில் சத்தியாகிரக போராட்டம் நடத்தும் பாஜக..!

Scroll Down To Discover

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விளக்க பொதுக்கூட்டம், பேரணி மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

குமாி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் ஒன்று கூடி குடியுாிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு ஊாில் உள்ள இந்து கோவில்களில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (16/03/2020) சரலூர், வெள்ளடிச்சான் விளை, வட்டவிளை, மேலசரக்கல் விளை, கீழ சரக்கல் விளை உட்பட 12 ஊர்களில் உள்ள இந்து கோவில்களில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவா்கள் பக்தி பாடல்கள் பஜனை பாடி இந்தியாவின் வரலாற்றுகளையும் குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் பாதுகாப்பு அம்சங்களையும் பற்றி பாஜக தலைவா்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் வெள்ளடிச்சான் விளையில் நடந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவா் எம்.ஆர்.காந்தியும் வட்டவிளையில் நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனா தேவ் கலந்து கொண்டு பேசினார்கள். இதே போல் தொடர்ந்து தமிழகம் முமுவதும் அனைத்து ஊர் கோவில்களிலும் நடக்கும் என்றனர்.