இந்து ஆலயங்களை தினந்தோறும் திறக்கக்கோரி தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover

மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவை காரணம் காட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் மூடி, பக்தர்களை அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியும், தினந்தோறும் இந்து ஆலயங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, அஞ்சல் அட்டைகளை தமிழக முதல்வருக்கு தபால் பெட்டிகளில் போட்டு நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.