இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமனம்..!

Scroll Down To Discover

இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அன்றைய தினம் விமானப்படை தளபதி பதவியை அமர் ப்ரீத் சிங் ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்…

1984 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் சேவை ஆற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 2023 பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருபவர் ஆவார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் [NDA] பயின்ற அமர் ப்ரீத் சிங் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங் – களையும் வகித்தவர் ஆவார்.

சிறப்பாக பணியாற்றியதற்காக 2019 ல் அதி விஷிஷ்த் சேவை பதக்கம் மற்றும் 2023ம் ஆண்டில் பரம் விஷிஷ்த் சேவை பதக்கத்தையும் பெற்றுள்ளார்.