இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலம் மோகா அருகே நேற்று இரவு தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், போர் விமானத்தின் விமானி அபினவ் சவுத்ரி பலியானார். விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக உரிய விசரணைக்கும் விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
Leave your comments here...