இந்திய ராணுவத்தின் துணைத் தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்..!

Scroll Down To Discover

இந்திய ராணுவ துணை தளபதியாக லெப்டினட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவ தலைமை தளபதியாக உள்ள மனோஜ் பாண்டே ஓரிரு மாதங்களில் ஒய்வு பெற உள்ளார். இதையடுத்து லெப்டின்ட் ஜெனரலாக உள்ள உபேந்திரா திவேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து உபேந்திர திவேதி ராணுவ துணை தளபதியாக இன்று(19-ம் தேதி) அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் டில்லி போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மனேஜ் பாண்டே ஒய்வு பெற்றவுடன் உபேந்திரா திவேதி ராணுவ தலைமை தளபதியாக தேர்வாகலாம் எனவும் கூறப்படுகிறது.தற்போது உபேந்திரா திவேதி வகித்த லெப்டினட் ஜெனரல் பதவிக்கு சுசீந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். உதம்பூர் பகுதியில் அவர் வகித்த வந்த பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் துணை தளபதி உபேந்திரா திவேதி: சைனிக் பள்ளி, ரேவா, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி மற்றும் இந்தியன் மிலிட்டரி அகாடமி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும், யோல்-அடிப்படையிலான தலைமையகங்கள் 9 கார்ப்ஸின் பொது அதிகாரியாகவும், காலாட்படையின் இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.