இந்திய போர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு விற்பனை – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் கைது.!

Scroll Down To Discover

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே ஒசர் என்ற பகுதியில் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு போர் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன.இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

நாசிக் அருகே ஒசர் பகுதியில் செயல்படும் எச்.ஏல்.எல்., 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு விமான படையில் உள்ள மிக் 21 ரகத்தில் உள்ள எப்.எல்., பி.ஐ.எஸ்., மற்றும் எம் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டிலேயே முழுக்க வடிவமைக்கப்பட்ட சு-30 எம்.கே.ஐ., இங்கு தயாராகிறது. இது தவிர கே.31 ஏவுகணை உற்பத்திக்கும் இந்த அலகு உரிமம் பெற்றுள்ளது.

இங்குள்ள விமான தளம் மற்றும் உள்ளே இருக்கும் தயாரிப்பு அலகுகள் ஆகியவை தடை செய்யப்பட்ட பகுதிகளாகும். இந்த நிலையில் இங்கு துணை மேற்பார்வையாளராக பணியாற்றும் தீபக் சிர்சாத் நடவடிக்கைகள் குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான்., சர்வதேச உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தீபக் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
https://twitter.com/WPCPSFION/status/1314499448978972672?s=20
அவரிடமிருந்து 3 மொபைல் போன்கள், 5 சிம் கார்டுகள், இரண்டு மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் இந்திய போர் விமானங்கள் குறித்த தகவல்கள், தயாரிக்கும் இடத்தின் படங்கள், விமான தள படங்கள் ஆகியவை இருந்துள்ளன. இவற்றை வாட்ஸ்அப் மூலம் ஐ.எஸ்.ஐ.,க்கு அனுப்பியுள்ளார்.