இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட போர் தளவாடங்களை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார் பிரதமர் மோடி

Scroll Down To Discover

பிரதமர் மோடி நவம்பர் 19-ந்தேதி உத்தர பிரதேசம் செல்கிறார். ஜான்சியில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அப்போது சுயசார்பு இந்தியா மூலம் உள்நாட்டில் உள்ள நிறுவனங்கள் தயாரித்துள்ள போர் தளவாடங்களை அந்தந்த பிரிவிடம் முறைப்படி ஒப்படைக்கிறார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள இலகு ரக போர் விமானங்கள், டிரோன்களை விமானப்படைக்கு முறைப்படை வழங்குகிறார். அதேபோல் போர் கப்பலுக்காக பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் டி.ஆர்.டி.ஓ. தயாரித்துள்ள மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட்-ஐ கடற்படை தளபதியிடம் வழங்குகிறார்.