இந்திய தேசியக் கொடியை அவமானப்படுத்திய அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு..!

Scroll Down To Discover

அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக்கொடி இடம் பெற்ற டி ஷார்ட்கள், காலணிகள் இடம் பெற்று இருந்தன. மூவர்ணக்கொடியை அவமதிக்கும் வகையில், அமேசான் நிறுவனத்தின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பலரும் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்திய தேசியக் கொடியை அவமானப்படுத்தியதாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து, சமூக வலைதளங்களில் அதிக பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புதிய புகார் ஒன்றில் அமேசான் ஆன்லைன் மீது எழுந்துள்ளது. அதாவது தேசியக் கொடியை பயன்படுத்தி மாஸ்க், டி.ஷர்ட், கீ செயின்கள் உள்ளிட்டவற்றை அமேசான் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக ஷூக்களில் தேசியக் கொடி இடம்பெறுவது உள்ளிட்டவற்றால் தேசியக் கொடி அவமானப்படுத்தப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை மையப்படுத்தி ட்விட்டரில், #Amazon_Insults_National_Flag என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில், அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தேசியக்கொடி சட்டத்தை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவிடுமாறு மத்தியபிரதேச அரசின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.