இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி: சப்-லெப்டினன்ட் ஷிவாங்கி, கொச்சி கடற்படை தளத்தில் பதவியேற்பு..!

Scroll Down To Discover

இந்தியா ராணுவத்தின் முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், இந்தியத் தரைப்படை, கடற்படை, விமானப்படையில் பெண் விமானிகளையும் வீராங்கனைகளையும் அதிக எண்ணிக்கையில் நியமிக்க 2016ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து, முப்படைகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி முசாபர்பூரை சேர்ந்தவர். இவர் தனது பள்ளிப்படிப்பை முசாபர்பூர்நகரில் உள்ள டி வி பள்ளியில் முடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாகச் சேர்ந்தார். எழுமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் கடந்த வருடம் ஜூன் மாதம் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே விமான போக்குவரத்து அதிகாரிகள் பதவியில் சில பெண்கள் பணி ஆற்றி உள்ளனர். ஆனால் முதல் பெண் விமானி ஷிவாங்கி ஆவார். ஆகவே அவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் கடற்படை விமான பயிற்சிகளை முடித்த ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் இன்று முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார். துணை அட்மிரல் ஏகே சாவ்லா விமானியாக தகுதிபெறும் ‘விங்ஸ்’ பதக்கத்தை ஷிவாங்கிக்கு அணிவித்து பொறுப்பேற்கச் செய்தார்.

https://youtu.be/0IkaNSSC92U

இதுகுறித்து பேசிய ஷிவாங்கி:- இந்த நாளுக்காகத்தான் நீண்டகாலமாக காத்திருந்ததாகவும், தன்னுடைய ஆசை இன்று நிறைவேறியது மகிழ்ச்சியளிப்பதாகவும், மூன்றாம் கட்ட பயிற்சியை முடிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.