இந்திய உளவு அமைப்பான RAW-வின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமனம்.!

Scroll Down To Discover

இந்திய உளவு அமைப்பான ரா-வின் அடுத்த தலைவராக ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

ராவின் தற்போதைய தலைவரான சமந்த் கோயலின் பதவிக் காலம் இம்மாதம் 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதன் காரணமாக, அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், ராவின் அடுத்த தலைவராக ரவி சின்ஹாவை தேர்வு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி ராவின் புதிய தலைவராக ரவி சின்ஹா பதவியேற்க இருக்கிறார்.

சத்தீஸ்கர் கேடரில் 1988-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ரவி சின்ஹா, RAW ஏஜென்சியின் செயல்பாட்டுப் பிரிவின் தலைவராக ஏழு ஆண்டுகள் பதவியிலிருந்திருக்கிறார். இப்போதைக்கு RAW ஏஜென்சியின் இரண்டாவது தளபதியாகவும் இருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல் ரவி சின்ஹா தற்போது அமைச்சரவைச் செயலகத்தில் சிறப்புச் செயலாளராகவும் இருக்கிறார். ரவி சின்ஹாவைப் பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் பிரச்னை, இடதுசாரி தீவிரவாதம் போன்ற முக்கியமான பிரச்னைகளை நுணுக்கமாக அணுகக்கூடியவராக அறியப்படுகிறார்.RAW ஏஜென்சியின் நுண்ணறிவு சேகரிப்புத்துறையில் நவீன தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டதற்கு ரவி சின்ஹா முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இவர் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாட்டு நடவடிக்கைகளில் சிறந்தவராவார்.