ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை யூனியன் பிரதேச நிர்வாகம் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் திறந்தவெளி மிதவை தியேட்டர் திறக்கப்பட்டது.
இதை, ஜம்மு – காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா திறந்து வைத்தார். அந்த திரையில், 1964ல் வெளியான காஷ்மீர் கி காலி என்ற பாலிவுட் திரைப்படம் திரையிடப்பட்டது.
அப்பகுதி மக்கள், இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.ஏரியின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் திரையில் படங்கள் ஒளிபரப்பப்படும். படகுகளில் சென்று, மக்கள் படம் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் திறந்தவெளி மிதவை தியேட்டர் இது.
Leave your comments here...