இந்தியாவின் முதல் இளம் 21 வயது பெண் மேயராக திருவனந்தபுரத்தில் பதவியேற்கும் ஆர்யா ராஜேந்திரன்.!

Scroll Down To Discover

திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வென்றனர். தற்போது பஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

அந்த வகையில் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை, புதிய மேயராக சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது.ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பிஎஸ்சி கணித மாணவியான ஆர்யா, எஸ்எஃப்ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர்.

சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார். கேரளாவில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கைப்பற்றியது. கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே தேர்தலில் வென்று மேயராக பொறுப்பேற்க உள்ள ஆர்யா ராஜேந்திரன், இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.