இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 9 ஆண்டுகளில் ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்வு – பிரதமர் மோடி

Scroll Down To Discover

தெலுங்கானாவுக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் தெலுங்கானாவின் வாரங்கால் நகருக்கு சென்றடைந்து உள்ளார். அதன்பின், நகரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, நடந்த பல்வேறு திட்ட தொடக்க நிகழ்ச்சிகளை இன்று தொடங்கி வைத்து உள்ளார். ரூ.6,100 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை அவர் நாட்டியுள்ளார். இதில், நெடுஞ்சாலைகள் முதல் ரெயில்வே வரையிலான வெவ்வேறு பிரிவுகளுக்கான பணிகளும் அடங்கும்.

இதனால், தெலுங்கானா மக்கள் பயனடைவார்கள் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் பொதுமக்கள் முன் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசும்போது, நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான மற்றொரு பெரிய ஊடகம் ஆக தயாரிப்பு துறை உருவாகி வருகிறது. உற்பத்தியை ஊக்குவிக்க, நாங்கள் உற்பத்தி தொடர்புடைய ஊக்க திட்டங்களை தொடங்கினோம்.

இதன்படி, தெலுங்கானாவில் 50 திட்டங்களை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். பாதுகாப்பு ஏற்றுமதி பொருட்களில் இந்தியா சாதனைகளை பதிவு செய்து வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.1,000 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால், இன்று ரூ.16 ஆயிரம் கோடியாக கடந்து உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.