பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்ஏஎல்) தேஜஸ் விமானத்திற்காக அமைக்கப்பட்ட ஆலையை திறந்து வைத்தர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்நாத்.
விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் புதிய ஆர்டர்களை பெறுவதை உறுதி செய்ய அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளுக்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க முடியாது.
Addressing the ‘Curtain Raiser’ event for #AeroIndia2021 in Bengaluru. https://t.co/D0gdD9NGJF
— Rajnath Singh (@rajnathsingh) February 2, 2021
கொரோனாதொற்றுநோய் இருந்தபோதிலும், நாம் ரூ .48,000 கோடி ஆர்டரை பெற்றுள்ளோம்.உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் அடிப்படையில் இது மிகப்பெரிய கொள்முதல் ஆகும். இது இந்திய விண்வெளித் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் .
உள்நாட்டு தேஜஸ் எம் 1 ஏ போர் விமானங்களை வாங்குவதில் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. எச்.ஏ.எல் மற்ற நாடுகளிடமிருந்து மிக விரைவில் ஆர்டர்களைப் பெறும்.தேஜாஸ் போர்விமானம் என்ஜின் திறன், ரேடார் அமைப்பு, காட்சி எல்லைக்கு அப்பால் ஏவுகணை வீச்சு, வானில் இருந்தே எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் வெளிநாட்டு போர்விமானங்களை விட சிறந்தது ,ஒப்பீட்டளவில் மலிவானது. அடுத்த 3-4 ஆண்டுகளில் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா ரூ .1.75 லட்சம் கோடி இலக்கை எட்டும் என கூறினார்.
Leave your comments here...