சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சப்பட்ட வழக்கில் ரௌடி கருக்கா வினோத் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மதியம் 2.40 மணியளவில் ஆளுநர் மாளிகை முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு பலகை(பேரிகார்டு) மீது ரௌடி கருக்கா வினோத் என்பவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்தை கைது செய்தனர். அவர் மீது கிண்டி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி என்ஐஏ மீண்டும் பதிவு செய்தது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், ஆளுநர் மாளிகையில் எந்த குறைபாடும் இல்லை. ரௌடி கருக்கை வினோத் ஆளுநர் மாளிகை பகுதியில் தனியாக நடந்து வந்ததகாகவும் அவருடன் யாரும் வரவில்லை. சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு அரசியல் பின்னணி உள்ளதா என்பதை விசாரணைக்கு பின்னரே தெரிவிக்க முடியும். தமிழகம் அமைதியான மாநிலம். சென்னை பாதுகாப்பான நகரம் என சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வெடிபொருள் பொருள்கள் சட்டம் 1908 இன் பிரிவுகள் 3,4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புகள் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகிய பிரிவுகளில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆளுநரை தாக்க முயற்சித்தல் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது.முன்னதாக, வினோத், தி.நகரில் உள்ள டாஸ்மாக் விற்பனை நிலையம், தேனாம்பேட்டை காவல் நிலையம் மற்றும் சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் போன்ற அரசு நிறுவனங்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்” என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.
Leave your comments here...