கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்கள் பல உள்ளன. ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் சபரிமலை அய்யப்பன் கோவிலை போல பெண்கள் மட்டுமே பொங்கலிடும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் இங்கு உள்ளது.
இக்கோவில் உலகம் முழுவதும் அறிந்த கோவில் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு காரணம் இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழா ஆகும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு பொங்காலை இடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இக்கோவில் இடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று நடந்தது. காலை 9.45 மணிக்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் பூசாரி தீமூட்டி விழாவை தொடங்கி வைத்தார். கோவில் முன்புள்ள அடுப்பில் தீமூட்டப்பட்டதும், பக்தர்கள் அவரவர் அடுப்புகளில் தீமூட்டி பொங்கல் விட தொடங்கினர்.
கோவில் அமைந்துள்ள கிழக்கே கோட்டை முதல் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கில் பெண்கள் பொங்கலிட்டனர்.பகல் 2.15 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி முடிந்து அம்ம னுக்கு பொங்கல் படைக்கப்படுகிறது. பின்னர் நைவேத்தியம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு குத்தியோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு தேவி கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு பக்தர்கள் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறுவதோடு, விழா முடிவுக்கு வருகிறது.மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 23 மருத்துவக் குழுவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Leave your comments here...