உலக புகழ்பெற்ற ஆயுர்வேத டாக்டரான டாக்டர் பி.கே.வாரியர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 100.தனது உறவினர் நிறுவிய கோட்டக்கல் ஆயுர்வேத வைத்திய சாலையின் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு மேலாளராக பணியில் சேர்ந்த பி.கே.வாரியர், பணியில் இருந்தவாறே ஆயுர்வேத மருத்துவத்தை நன்கு கற்று தேர்ந்தார்.
1954-ல் வைத்திய சாலையின் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்ற பி.கே.வாரியர் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகள், நவீனப்படுத்துதல் என கடந்த 66 ஆண்டுகாலம் செலவிட்டார். மூலிகை ஆய்வு மையம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் என ஆயுர்வேத மருத்துவத் துறையில் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்.
டாக்டர் பி.கே.வாரியர் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1413806788680380423?s=19
இதுதொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், ‘டாக்டர் பி.கே.வாரியர் மரணம் குறித்த தகவல் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஆயுர்வேத துறையை பிரபலப்படுத்தியதில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்’ என பதிவிட்டுள்ளார்.
Leave your comments here...