ஆயிரம் பேருக்கு  கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் .!

Scroll Down To Discover

திருச்சியில் ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நலத்திட்ட தொகுப்பினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி புத்தூர்  பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய உறையூர் பகுதியை சேர்ந்த புத்தூர், குறத்தெரு, நாச்சியார் கோவில், வாத்துக்கார தெரு, பாளையம் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெற்றனர். 

5 கிலோ அரிசி, ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பினை சுற்றுலாத்துறை அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி  நடராஜன் வழங்கினார்.முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாபன், அமராவதி கூட்டுறவு சங்கத் தலைவர் ஏர்போர்ட் விஜி, முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர் மற்றும் உறையூர் பகுதி  நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.