மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். காந்திநகர், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு நேற்று சென்றுள்ளார். ஆமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர் துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2-வது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து அகமதாபாத்க்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.
https://twitter.com/ANI/status/1575783298344792066?s=20&t=wt0Wquw_hfpqfWosSC8LuQ
அப்போது காந்தி நகர்-அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வருவதை கண்டார். உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார்.
Leave your comments here...