ஆப்கானிஸ்தானுக்கு 3 டன் மருத்துவ பொருட்களை வழங்கிய இந்தியா.!

Scroll Down To Discover

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனை சமாளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை உலக நாடுகள் வழங்கி வருகின்றன.

அந்தவகையில் இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்பட உயிர்காக்கும் மருத்துவ பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 3 கட்டங்களாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக நேற்று 3 டன் அளவிலான உயிர் காக்கும் மருத்துவ பொருள்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. அந்த மருத்துவ பொருட்கள் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.