ஆபரேஷன் சமுத்ரா சேது : இலங்கையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு இந்திய பிரஜைகளை ஏற்றி வந்தது இந்தியாவின் INS ஜலாஷ்வா..!

Scroll Down To Discover

ஆபரேஷன் சமுத்ரா சேது” க்காக இந்தியக் கடற்படையால் அனுப்பப்பட்ட இந்தியக் கடற்படைக் கப்பல் ஜலாஷ்வா, ஜூன் 02, 2020 அன்று 685 இந்திய பிரஜைகளை இலங்கையின் கொழும்பிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தது.

இலங்கையில் உள்ள இந்திய மிஷனால் இந்திய நாட்டினரை ஏற்றிச்செல்ல வசதி செய்யப்பட்டது. தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் பணியாளர்கள் கப்பலில் ஏறப்பட்டனர். கொவிட் தொடர்பான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கடல் கடந்து வரும் போது கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டன.


அழைத்து வரப்பட்டவர்களை தூத்துக்குடியில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வரவேற்றதுடன் விரைவாக இறங்குதல், சுகாதாரப் பரிசோதனை, குடி நுழைவு மற்றும் அழைத்து வரப்பட்டவர்களின் போக்குவரத்து ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த மீட்புப் பணியின் மூலம், இந்தியக் கடற்படை இப்போது 2173 இந்தியப் பிரஜைகளை மாலத்தீவு (1488) மற்றும் இலங்கை (685) ஆகிய நாடுகளிலிருந்து திரும்ப அழைத்து வந்துள்ளது.இந்தியக் கடற்படைக் கப்பல் ஜலாஷ்வா ஜூன் 05, 2020 அன்று தோராயமாக 700 இந்திய நாட்டினரைத் திருப்பி அழைத்துவருவதற்காக மாலத்தீவுக்குச் செல்லவுள்ளது.