ஆன்லைன் மோசடி.. 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல் – ரிசர்வ் வங்கி நடவடிக்கை..!

Scroll Down To Discover

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பயன்படுத்தப்படாத கணக்குகளை 3 வகையாக பிரித்து, மூடுவதாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக எந்த பணப்பரிவர்த்தனைகளும் செய்யாத கணக்குகள் மூடப்படுகின்றன. இந்த கணக்குகளே பெரும்பான்மையான சைபர் க்ரைம் குற்றங்களுக்கு பயன்படுத்துவதே இதற்கு காரணம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

இதுதவிர, 12 மாதங்கள் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகள் ஆகும். இவையும் முடக்கும்படி கூறி உள்ள ரிசர்வ் வங்கி, அந்த கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை நேரடியாக அணுகுமாறு கூறி உள்ளது. ஜீரோ பேலன்ஸ் கணக்குகளும் நிறுத்தி வைக்கப் படுகின்றன.

எனவே இந்த 3 வகையான வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரும்பும் வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளையை அணுகி விவரம் அறியலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.