ஆன்லைன் சூதாட்டங்களை தங்களது வரம்பிற்குள் கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்றும், சில மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன என்றும் மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.
மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அம்சங்களை இயற்ற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக ஆளுநர் ரவி, மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கூறியிருந்தார். மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
Leave your comments here...