ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் மாற்றியமைக்கப்படும் பேருந்துகள் ; அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி..!

Scroll Down To Discover

ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம், தனது சொகுசு பஸ் இருக்கைகளை மாற்றி அமைத்துள்ளது.

கொரோனா பரவலின் முக்கிய தடுப்பு நடவடிக்கையான சமூக இடைவெளியை பின்பற்ற தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், பொதுப்போக்குவரத்தை சமூக இடைவெளியுடன் நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

அதற்கு ஏற்றார்போல, ஆந்திர போக்குவரத்துக் கழகம் வழக்கமாக பேருந்துகளில் இருக்கக்கூடிய இருக்கைகளின் வடிவமைப்பை முற்றிலும் மாற்றி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கையாக மாற்றியுள்ளது. இப்படி அமைக்கும் போது மொத்தம் 26 சீட்டுகள் மட்டுமே அமைக்க முடிகிறது. ஆனால் சமூக இடைவெளி அவசியம் என்பதால் விஜயவாடா நகரில் உள்ள அரசு பேருந்து டெப்போ இது போன்ற வடிவமைப்புகளை பஸ்களில் ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ஒரு நபருக்கும் இன்னொருவருக்கும் ஒரு மீட்டர் இடைவெளி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் பயணிக்கக்கூடிய தொலைதூரப் பேருந்துகளுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் போக்குவரத்து துவங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இதுபோன்ற ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும், சகஜமான நிலை வந்த பிறகு இருக்கைகள் பழைய முறையைப்போல மாற்றவும் முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பேருந்துகள் முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவும், இருக்கைகள், கைப்பிடிகள் உள்ளிட்டவை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.