ஆட்சியர் அலுவலகத்தில் கொடிக்கம்பத்தில் தூக்கில் தொங்கிய தூய்மைப் பணியாளர் மீட்ட தீயணைப்பு துறையினர்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் 55 என்ற தூய்மைப் பணியாளர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொட்டை மாடியில் உள்ள கொடிக்கம்பத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதை பார்த்த ஊழியர்கள் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து கொடிக்கம்பத்தில் தொங்கிய வேல்முருகனின் உடலை இறக்கி தல்லாகுளம் உதவி ஆய்வாளர் புலிக்குட்டி அய்யனார் ஒப்படைத்தார்.

அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியது அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி: Ravi Chandran