ஆடிட்டிங்கில் முறைகேடு ; போலியான 266 போலி என்ஜிஓ-க்களுக்கு நிதி நிறுத்தம் – மத்திய அரசு நடவடிக்கை

Scroll Down To Discover

இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் மற்றும் தனியார் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து கொடையாளர்கள் வழங்கும் நிதி உதவிகளை பெற்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு சமீபத்தில் சில மாற்றங்களை அறிவித்தது.

அதன்படி, வெளிநாட்டு வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக மத்திய அரசு புகார்கள் வந்தது.

இதனையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 1,276 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய அரசு தலா ரூ.25 லட்சம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் 266 தொண்டு நிறுவனங்கள் ஆடிட்டிங்கில் முறைகேடு செய்ததாகவும் விதிமுறைகளை மீறியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போலியான வெற்று பெயர்கள் மூலம் நிதியைப் பெற்று வந்த 266 என்.ஜி.ஓ.க்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது.