ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்..!

Scroll Down To Discover

கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 12-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ 1,43,612 கோடி ஜிஎச்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம் என மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்த ஆண்டு ஆகஸ்டில் 19% அதிகரித்து ரூ8.386 கோடியானது.