அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதமாக போலீசார் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமரன் மதுரை மாநகராட்சி உதவி பொறியாளர் செல்வம் ஆகியோர் வெள்ளக்கல் விபத்து ஏற்படும் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதில், மதுரை விமான நிலைய சாலை பகுதி அதிக போக்குவரத்து உள்ளதாகும். மேலும் ,அவனியாபுரம் மதுரை பகுதிகளில் இருந்து வெள்ளக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு தினமும் வரும் 400 – க்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து லாரிகள் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.

அதனை தடுக்கும் விதமாக வெள்ளக்கல் பகுதியில் பேருந்து நிறுத்தம் முன்புறம் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு வேலிகளை அமைத்து சோதனை முறையில் போக்குவரத்தை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வரும் வாகனங்கள் வேகம் குறைக்கப்பட்டு செல்கின்றது.இதனால் இந்த பகுதியில் நடைபெறும் உயிரிழப்பு, தொடர் விபத்தை தடுக்க போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.