அலங்காநல்லூர் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலை : சீரமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியில் பல ஆண்டுகளாக பழுதாகி உள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலையை பழுது நீக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

சிக்கந்தர் சாவடி சிவன் கோயிலிருந்து- கூடல்நகர் அவுட் போஸ்ட் வரை மதுரை அலங்காநல்லூருக்கு செல்லும் சாலையானது கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், குண்டும், குழியுமாக சாலையில் நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
இதனால், இப்பகுதியில் வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி பழுது ஏற்பட்டு, பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், சாலையில் உள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் வருவோர் கீழே விழவும் வாய்ப்புள்ளதாம்.
இது குறித்து மதுரை மேற்கு நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித்துறையினர், விரைந்து பழுதான சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.