அலங்காநல்லூரில் சஷ்டி கவசம் புத்தகம் விநியோகித்த இந்து மக்கள் கட்சி..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அருகே மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர், பொதுமக்களுக்கு கந்த சஷ்டி கவசம் அடங்கிய புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை புறநகர் மாவட்டச் செயலர் சிங்கராசு தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் பூமிநாதன், துணைத் தலைவர் சுரேஷ்பாபு, மேலூர் நகரச் செயலர் வி. பாண்டி, வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர் பி. பாண்டி, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் முரளி கண்ணன், பாக்கியராஜ், அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.