அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள்..!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குறைந்துவந்த வைரஸ் தொற்று பாதிப்பு, கடந்த மூன்று நாட்களாக திடீரென அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகர் பகுதிகளில் தொற்று பரவல் அதிகரிப்பதாக வந்த ஆய்வுகளையடுத்து, இன்று ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு நாளில், முழுமையான அளவு கிருமி நாசினி தெளிக்க மாவட்ட சுகாதாரத்துறையும், நகராட்சி சுகதாரத்துறையும் இணைந்து முடிவு செய்தனர். அருப்புக்கோட்டையில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, நகராட்சி சுகாதாரத்துறையினர் நகர் பகுதிகள் அனைத்திலும் இன்று ஒரேநாளில், ஒட்டுமொத்த கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை செய்தனர்.

மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்கள், நகராட்சி அலுவலகம், காவல்நிலையம், அரசுமருத்துவமனை, பேருந்து நிறுத்தங்கள், வட்டாச்சியர் அலுவலகம், ஏடிஎம்கள் மற்றும் பஜார், கடைவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில், கவசஉடை அணிந்த நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது.