அரசு முறை பயணமாக மொரீசியஸ் சென்றுள்ள பிரதமர் மோடி – பிரம்மாண்ட வரவேற்பு

Scroll Down To Discover

2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோரீஷஸ் தேசிய தினம் மாா்ச் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம், பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அந்நாட்டுக்குப் பிரதமா் மோடி சென்றுள்ளார்.

அந்நாட்டின் 57-ஆவது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகவும் இருநாடுகளின் கூட்டுறவை மேலும் மேம்படுத்தவும், இருநாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் வளமைக்காக நட்புறவை வலுப்படுத்தவும், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்காகவும் மோரீஷஸ் தலைவா்களைச் சந்திக்கப்பதற்காகவும் பிரதமர் மோடி மோரீஷஸ் சென்றுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு பிரதமர் மோடி, மோரீஷஸ் சென்றடைந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மோரீஷஸ் துணைப் பிரதமர், நாடாளுமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியை வரவேற்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மத தலைவர்கள் என 200 மேற்பட்டோர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரிந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.