அரசு மருத்துவமனையில் கோயில் சார்பில் அன்னதானம்.!

Scroll Down To Discover

மதுரை அருகே சோழவந்தான் இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட ஜெனகை மாரியம்மன் கோவிலில் தினசரி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் அரசு உத்தரவின்படி இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை மதுரை மண்டல இணை ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தலின்படி,, இக்கோவிலில் அன்னதானம் பார்சலாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. தலைமை மருத்துவர் தீபா, செவிலியர் கௌரி, மருந்தாளர் முத்துராஜா கோவில் செயல் அலுவலர்க இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.