அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி இளைஞா் கைது..!

Scroll Down To Discover

விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட பிறகு மாயமான கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட டெல்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே விழுப்புரம் மாவட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

டெல்லியிலிருந்து கடந்த மாதம் வேலை தேடி புதுச்சேரிக்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த நபர், கடந்த 6-ம் தேதி திடீரென மாயமானார். 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே படாளம் பகுதியில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் அந்த நபர் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, ஆம்புலன்ஸ் மூலம் போலீசார், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த வடமாநில லாரி ஓட்டுநர்கள் 4 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.