கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், திமு.க. கூட்டணி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையொட்டி சட்டசபை பொதுதேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைதேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி பொது செயலாளருமான விஜய் வசந்த் என்ற விஜயகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். 5,76,037 வாக்குகளை பெற்று விஜய் வசந்த் வெற்றி கண்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட 1,37,650 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டம் முழுவதும் தினமும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்திருந்தது.
இந்நிலையில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த். மேலும் வரவரும் நாட்களில் மக்களின் தேவைகளை ஆராய்ந்து இன்னும் ஏராளமான சேவைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தன்னுடைய டிட்டரில் பதிவிட்டிருந்தார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கப்பட்டது. வரும் நாட்களில் மக்களின் தேவைகளை ஆராய்ந்து இன்னும் ஏராளமான சேவைகள் செய்ய திட்டமிட்டுள்ளோம். pic.twitter.com/CCgPUYOcjq
— Vijay Vasanth (@iamvijayvasanth) May 13, 2021
விஜய் வசந்த அவர்களுடைய இந்த பதிவுக்கு, “MPLAD fund எல்லாம் மத்திய அரசு நிப்பாட்டி வச்சிருக்காங்க. நீங்க மட்டும் எப்படி manage பண்ணுறீங்க?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நிதி வசதிகள் பெற தாமதம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வசதியை எனது சொந்த செலவில் செய்துள்ளேன். நம்மால் முடிந்தவரை மக்களுக்காக செய்வோம். https://t.co/tXDqOFsy4z
— Vijay Vasanth (@iamvijayvasanth) May 13, 2021
இந்தப் பதிவுக்கு விஜய் வசந்த், “நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் நிதி வசதிகள் பெற தாமதம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த வசதியை எனது சொந்த செலவில் செய்துள்ளேன். நம்மால் முடிந்தவரை மக்களுக்காக செய்வோம்” என்று பதிலளித்துள்ளார்.
Leave your comments here...