அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பஸ் பயணம் குறித்து விழிப்புணர்வு.!

Scroll Down To Discover

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுடன் பேருந்துபாதுகாப்பு பயணம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆ.ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்றது.

அருகில், காவல்துறை துணை ஆணையர் எஸ்.ஆறுமுகசாமி, சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலர் எஸ்.பார்த்தசாரதி, பெட்கிராப்ட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம், போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் கே இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பேசியது: மாணவர்கள், பஸ்களில் பயணம் செய்யும்போது படிக்கட்டுகளில் தொங்குவதை தவிர்க்க வேண்டும்.
பஸ்களில் பஸ் நிறுத்தங்களில் மட்டுமே ஏறி, இறங்கவேண்டும் என்றார்.