அரசு பெண்கள் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் கழிப்பறை வசதி..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் 12 அறைகள் கொண்ட கழிப்பறை வசதி செய்து கொடுக்கபட்டது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் போதிய கழிப்பறை வசதி இல்லாத சூழ்நிலையில் இதனை கண்டறிந்த மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் தாமாக முன்வந்து இலவசமாக கழிப்பறை வசதி அமைக்கும் பணியை ஓராண்டுக்கு முன் தொடங்கினர். பணிகள் முடிவுற்ற நிலையில் 12 அரைகள் கொண்ட கழிப்பறை திறக்கப்பட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க ஆளுநர் ராஜா கோவிந்தசாமி தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் ராமநாதன் செயலாளர் பொன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி ஊக்குவித்தனர்.

– மதுரை ரவிசந்திரன்