அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில் இடம்: கிராம மக்கள் பாராட்டு

Scroll Down To Discover

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் குட்டிமேய்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் தீபிகா 18. இவர் பள்ளிப்படிப்பை குட்டி மேய்க்கப்பட்டி அரசு பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார்.

அரசு பள்ளியில் படித்த இவருக்கு நீட் தேர்வு மூலமாக சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவியை, பள்ளித் தலைமை ஆசிரியை கஸ்தூரி, ஒன்றியக் கவுன்சிலர் விமலா தயாளன், மற்றும் மதுரை மாவட்ட கொங்கு பேரவை நிர்வாகி தயாளன் ஆகியோரை பாராட்டியும், சால்வைகள் அணிவித்தும் நிதியுதவி அளித்தனர்.