துாத்துக்குடி டூவிபுரம் ராஜவேல் தாக்கல் செய்த மனு:நான் ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர். துாத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் மடத்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசு நிலம் உள்ளது.அங்கு அனுமதியின்றி சி.எஸ்.ஐ.,சர்ச் கட்டுமானம் துவங்கியது. மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசுக்கு புகார் அனுப்பினோம். சமாதான கூட்டம் நடந்தது.
கட்டுமானம் மேற்கொள்ளமாட்டோம் என சர்ச் நிர்வாகத் தரப்பு உறுதியளித்தது. அதை மீறி கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர், சிப்காட் போலீசில் புகார் அளித்தோம். கட்டுணமானம் மற்றும் சர்ச் கட்டடத்தை திறக்க தடை விதிக்க வேண்டும்.கட்டடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுகுறித்து நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது என, அரசுத் தரப்பு தெரிவித்தது.துாத்துக்குடி கலெக்டர், தாசில்தார், சிப்காட் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Leave your comments here...