அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய- சட்டமன்ற உறுப்பினர் சரவணன்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட விரகனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்காக பென்ச்பலகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ சரவணன் பள்ளிக்கூடத்தை ஆய்வுசெய்து பார்வையிட்டு தொடர்ந்துமாணவ-மாணவிகளுக்கு பயன்பெறும் வகையில் பென்ச் பலகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மேல்நிலை படிக்கும் மாணவர்களுக்காக புரவலர் திட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

தொடர்ந்து பேட்டி அளித்த மருத்துவர் சரவணன்:-எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்காக நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்கி வருகின்றேன்.

இந்த வகையில் விரகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக பென்சில் பலகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது அதில் தொடர்ந்து பள்ளி வளர்ச்சிக்காக தலைமையாசிரியர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கண்காணிப்பு கேமரா உள்ளிட்டஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தார். நிச்சயமாக பள்ளியின் வளர்ச்சிக்காக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

செய்தி: Ravi Chandran