அய்யப்பனும் கோசியும்’ பட இயக்குநர் சச்சி திடீர் மரணம் – அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!

Scroll Down To Discover

இயக்குநர் சச்சி இயக்கத்தில், பிரித்திவிராஜ், பிஜூ மேனன் இணைந்து நடித்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவில் வெளியாகியுள்ள படம் ‘அய்யப்பனும், கோசியும்.’ இந்தப் படத்தில், ‘களக்காத்த சந்தனமேரம் வெகு வேகா பூத்திருக்கு’ என்று தொடங்கும் டைட்டில் பாடலைப் பாடியிருக்கிறார் நஞ்சியம்மா. யூ-ட்யூபில் 45 லட்சம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என்று அனைத்துத் சமூக வலைதளங்களிலும், அந்தப் பாடல்தான் வைரல்.

கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. 2015-ம் ஆண்டு பிருத்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தை இயக்கிய சச்சி, சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார்.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இயக்குனர் சாச்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது அறுவை சிகிச்சை முறையாக நடந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சாச்சியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. சாச்சியின் மூளை செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 18) இரவு மருத்துவமனையில் காலமானார். அவரது இழப்பால் மலையாள திரையுலகம் கவலையில் உள்ளது.